slide1
slide2
slide3
slide4
slide5

For Iphone & ipad listners

You can listen to Tamil Christian Radio in your iPhone or iPad by click the link below

CLICK HERE

Tamil Christian Radio

Loading ...

Live

Daily Meditation

அனுதின தியானம்

 

ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைகளுக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான். - 2சாமுவேல் 16:12

தாவீது அவனுடைய ஊழியக்காரர்களும் அப்சலோமுக்குத் தப்பி ஓடுகையில் பகூரிம் வந்தபோது சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தூஷித்து, அவர்கள் மேல் கற்களை எறிந்தான்.  அப்பொழுது தாவீது அவனுக்கு ஒன்றும் செய்யாமல், அவன் என்னைத் தூஷிக்கட்டும்@ தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்@ ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.  அவன் தூஷிக்கட்டும் அவன் அப்படிச் செய்யக் கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.  ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைகளுக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.  தாவீது சிறுமைபட்டபோதும், அவமானங்களை சந்தித்தபோதும் தேவன் என்னுடைய நிந்தனைகளுக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் செய்வார் என்று சொல்லுகிறார்.  ஒரு வேளை உங்களுடைய வாழ்க்கையிலும் தாவீதைப்போல சிறுமைபடுத்தப்பட்டு, மற்றவர்களால் அவமானப்படுத்தப்பட்டு போகிறீர்களா, தேவன் உங்களுக்கு நிச்சயமாய் நன்மை செய்வார் என்று விசுவாசியுங்கள்.  அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.(ரோமர் 8:28)  தாவீது சொல்லுகிறார் தேவன் இந்த சிறுமைக்கும் நிந்தனைகளுக்கும் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார்.  ஆதாவது தேவன் இந்த சிறுமையையும், நிந்தனைகளையும் நன்மையின் மூலமாய் அவைகளை மறையப்பன்னுவார் என்று சொல்லுகிறார்.  எனவே தேவன் இப்பொழுத உங்கள் வாழ்க்கையில் அனுமதித்துள்ள போராட்டங்களும், நிந்தனைகளும் உங்கள் நன்மைக்காக என்பதை விசுவாசியுங்கள். பெறுமையாக காத்திருங்கள்.  ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?(மத் 7:11)  தாவீது நிந்தனைகளையும், அவமானங்களையும், சிறுமையையும் கடந்த பின்பு அதை குறித்து சொல்லும் போது, தேவன் தன்னை செழிப்பான இடத்தில் கொண்டுவந்தார் என்று சொல்லுகிறார். மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்@ தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்@ செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.(சங் 66:12)  எனவே இப்பொழுது துன்பப்படுகிற நீங்கள். நிந்தனைகளை சுமர்க்கிற நீங்கள் செழிப்பான இடத்தை நோக்கி சென்றகொண்டிருக்கிறீர்கள்.  ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். (எபி 12:3)

இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், - 1தீமோத்தேயு 6:17

Daily Meditation

It may be that the Lord will look on my affliction, and that the Lord will repay me with good for his cursing this day.” - 2Samuel 16:12

When David and his officials escapes from the hand of Absalom then came to the place named Bahurim, one of Saul's relatives, Shimei son of Gera, came out to meet him, cursing him and started throwing stones at David and his officials.  David did not do anything against him.  David said  let him curse, because the Lord has said to him, ‘Curse David.’ Who then shall say, ‘Why have you done so?’”  The Lord told him to curse; so leave him alone and let him do it.  When David was affiliated and  put to shame he said that the Lord will repay me with good for his cursing this day.  Sometimes like David you may also passing through affiliation or people around you may plan to put shame on you.  Believe that our Lord Jesus Christ will do good to you.  And we know that all things work together for good to those who love God, to those who are the called according to His purpose.(Rom 8:28)  David is saying like this the Lord will repay me with good for his cursing this day.  In other wise he is saying Lord will depart this affiliation and cursing through good.  So whatever the affiliation, cursing, difficulties that God permits in your life, believe it that it's for your good.  Be patient and endure it.  If you then, being evil, know how to give good gifts to your children, how much more will your Father who is in heaven give good things to those who ask Him!(Mat 7:11)  After passing through the affiliation and cures David say about his experience that now God brought him to a fruitful place. You have caused men to ride over our heads; We went through fire and through water; But You brought us out to rich fulfillment.(Ps 66:12)  So you may passing through affiliation and curses now, But you are on the way towards a fruitful place.  For consider Him who endured such hostility from sinners against Himself, lest you become weary and discouraged in your souls.(Heb 12:3)

Command those who are rich in this present age not to be haughty, nor to trust in uncertain riches but in the living God, who gives us richly all things to enjoy. - 1 Timothy 6:17

Call to Listen

USA Listeners
718-870-9000
712-832-2776

UK Listeners
330-115-1056
330-606-0937

Australia Listeners
028-072-5116

Tamil Christian Radio Apps

apps1
apps2

Subscribe for Daily Meditation

Form Object